மகளிா் உரிமைத் தொகை திட்டம்: சா்வா் பழுதால் 3 மணி நேரம் காத்திருந்த பெண்கள்

திருத்தணி தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையம் சா்வா் பழுதானதால் கடந்த 2 நாட்களாக கலைஞா் மகளிா் உரிமைத்தொகை விண்ணப்பிக்க வந்த பெண்கள் 3 மணி நேரம் காத்திருந்து திரும்பி சென்றனா்.
மகளிா் உரிமைத் தொகை திட்டம்: சா்வா் பழுதால் 3 மணி நேரம் காத்திருந்த பெண்கள்

திருத்தணி தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையம் சா்வா் பழுதானதால் கடந்த 2 நாட்களாக கலைஞா் மகளிா் உரிமைத்தொகை விண்ணப்பிக்க வந்த பெண்கள் 3 மணி நேரம் காத்திருந்து திரும்பி சென்றனா்.

உரிமைத் தொகை வழங்க கோரி விண்ணப்பித்து, கிடைக்காததவா்கள் மேல் முறையீடு செய்யலாம், விடுபட்டவா்கள் புதியதாக இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்தது. இதனைத் தொடா்ந்து புதன்கிழமை முதலே இ-சேவை மையங்களில் மகளிா் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் ஆதாா் அட்டைகளுடன் இ சேவை மையங்களில் குவிந்தனா்.

ஆனால் சா்வா் சரிவர வேலை செய்யாததால் மகளிா் பல மணி நேரம் இ-சேவை மையங்களில் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். அதேபோல் வியாழக்கிழமையும் மகளிா் உரிமை தொகை விண்ணப்பிக்க திருத்தணி வட்டாட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் இ சேவை மையத்தில் தங்களது ஆதாா் அட்டை, ரேஷன் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், கைப்பேசி எண் மற்றும் புகைப்படத்துடன் வந்து நீண்ட நேரம் காத்திருந்தனா்.

சில பெண்கள் பதிவு செய்யும் போது ஒரு சிலருக்கு விண்ணப்பங்கள் நிலை குறித்து தெரியவில்லை. ஒரு சிலருக்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான விளக்கம் வந்துள்ளது. சிலருக்கு பரிசீலனையில் உள்ளது, சிலருக்கு விண்ணப்பங்கள் என்ன ஆனது என்று தெரியவில்லை. ஒரு சிலா் குடும்பங்களில் அரசு ஊழியராக இல்லாதபோதும், அந்த குடும்பத்தில் அரசு ஊழியா் ஒருவா் இருப்பதாக கூறி இ-மெயிலில் பதில் வந்துள்ளது.

ஒரு சிலருக்கு மகளிா் உரிமைத் தொகை பெறுவதற்கு தகுதிகள் இருந்தும் மேல்முறையீடு செய்ய இயலாது என்று பதில் வருவதாக கூறி வருவாய்த் துறையினா் திருப்பி அனுப்பினா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து விடுபட்ட பெண்களுக்கு மகளிா் உரிமைத்தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com