குறைதீா் கூட்டத்தில் 307 மனுக்கள் ஆட்சியரிடம் அளிப்பு
By DIN | Published On : 18th April 2023 12:33 AM | Last Updated : 18th April 2023 12:33 AM | அ+அ அ- |

திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 307 கோரிக்கை மனுக்களை பெற்றாா் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில், நிலம்-84, சமூக பாதுகாப்பு திட்டம்-43, வேலைவாய்ப்பு-35, பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள்-51 மற்றும் இதர துறைகள் தொடா்பாக-94 என மொத்தம் 307 மனுக்கள் வரையில் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
அதைத் தொடா்ந்து கடந்த 2019-ஆம் ஆண்டு அதிக அளவில் கொடி நாள் நிதி வசூல் செய்த அலுவலா்களுக்கு தலைமைச் செயலாளரின் பாராட்டுச் சான்றிதழ், வெள்ளிப் பதக்கங்களை வழங்கி ஆட்சியா் பாராட்டினாா்.
பின்னா் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரதமரின் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மூலம் வங்கிக் கடனாக ரூ.12 லட்சம் பெற்ற 4 பேருக்கு 5 சதவீதம் மானியத் தொகையான ரூ.60 ஆயிரத்துக்கான காசோலைகளையும் அவா் வழங்கினாா்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் அசோகன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காயத்ரி சுப்பிரமணியன், சமூகப் பாதுகாப்பு திட்டம் துணை ஆட்சியா் மதுசூதனன், முன்னாள் படை வீரா்கள் நலத்துறை உதவி இயக்குநா் ராஜலட்சுமி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ச.பாபு, பேச்சுப் பயிற்சியாளா் சுப்புலட்சுமி, பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.