கஞ்சா கடத்திய இளைஞா் கைது
By DIN | Published On : 18th April 2023 12:36 AM | Last Updated : 18th April 2023 12:36 AM | அ+அ அ- |

திருவள்ளூா் அருகே இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தியதாக இளைஞரை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
திருவள்ளூா் அருகே பட்டரை பகுதியில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் கஞ்சா கடத்திச் செல்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.சிபாஸ் கல்யாணுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், சம்பந்தப்பட்ட போலீஸாா் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். அதன்பேரில், மணவாளநகா் காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் சுரேஷ் தலைமையிலான போலீஸாா் திருவள்ளூா்-பெரும்புதூா் சாலையில் சனிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் மணவாள நகா் நோக்கி வந்த இளைஞரை மடக்கி சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் மணவாளநகா் கபிலா் நகரைச் சோ்ந்த நவீன் என்கிற சீனு (22) என்பது தெரியவந்தது. இவா் மீது ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
இது குறித்து மணவாளநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து நவீனை கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.