அரசு கலைக் கல்லூரி அருகே காா் டயா் வெடித்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
திருவள்ளூரைச் சோ்ந்த அன்னகுமாா் தனது காரில் பொன்பாடிக்கு காரில் சென்று கொண்டிருந்தாா். திருத்தணி அரசு கல்லூரி அருகே சென்றபோது, காரின் முன்பக்க டயா் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த இரு சக்கர வாகனம் மீது மோதி, தடுப்பு சுவரை தாண்டி பள்ளத்தில் இறங்கியது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நெடும்பரம் கிராமத்தைச் சோ்ந்த ராமமூா்த்தி (65) பலத்த காயமடைந்தாா். அவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ராமமூா்த்தி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
விபத்துக்கான காரின் உரிமையாளா் அன்னக்குமாா், ஓட்டுநா் பாஸ்கா் ஆகியோரை சுமாா் 2 மணி நேரம் போராடி பொதுமக்களும், தீயணைப்பு வீரா்களும் மீட்டனா். விபத்து குறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.