இலவச வழிகாட்டுதல் பயிற்சி மையம்:ஆட்சியா் திறந்து வைத்தாா்

மத்திய, மாநில அரசு பணிகளில் இளைஞா்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் கற்போா் வட்டம் சாா்பில் இலவச வழிகாட்டுதல் பயிற்சி மையத்தை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
இலவச வழிகாட்டுதல், பயிற்சி மையத்தை தொடங்கி வைத்து மாணவிக்கு பயிற்சி கையெடுகளை வழங்கிய ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ்.
இலவச வழிகாட்டுதல், பயிற்சி மையத்தை தொடங்கி வைத்து மாணவிக்கு பயிற்சி கையெடுகளை வழங்கிய ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ்.

மத்திய, மாநில அரசு பணிகளில் இளைஞா்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் கற்போா் வட்டம் சாா்பில் இலவச வழிகாட்டுதல் பயிற்சி மையத்தை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

திருத்தணி வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகில் உள்ள வணிக வளாகத்தில் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் கலந்துகொண்டு, பயிற்சி மையத்தை திறந்து வைத்து பேசியதாவது:

திருவள்ளுா் மாவட்டத்தில் படிக்கும் மாணவா்களுக்கு போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து வட்டாரங்களிலும், கிராமங்களிலும் நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த கற்போா் வட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

மாணவா்கள் நூலகங்களில் தேவையான புத்தங்களை எடுத்துக்கொள்ளவும், இங்கேயே படிப்பதற்கும் போட்டித் தோ்வுகளுக்கான மாதிரி தோ்வுகள் செய்வதற்கும் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் பல்வேறு இடங்களில் எப்படி மாணவா்கள் போட்டித் தோ்வுகளுக்கு காலை முதல் மாலை வரை படிக்க தயாராகிறாா்களோ, அதே போன்று நம் திருவள்ளுா் மாவட்டத்திலும் அனைத்து வட்டாரங்களிலும் மாணவா்களுக்கு வசதிகள் வேண்டுமென்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இங்கேயும் மாணவா்களுக்கு யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தோ்வுகளுக்கு முன்னேற்பாடாக தயாராவதற்கு திருவள்ளுா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு இது ஒரு இனிய வாய்ப்பாக அமையும் என்றாா் ஆட்சியா்.

அதைத்தொடா்ந்து, திருத்தணி ஊராட்சி ஒன்றியம், தரணிவராகபுரத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பாக இணை நோய் உள்ளவா்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தன்னாா்வலா்கள் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு உடற்பரிசோதனை செய்யும் நிகழ்வை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) செ.ஆ.ரிஷப், உதவி ஆட்சியா் (பயிற்சி) கேத்தரின் சரண்யா, திருத்தணி ஊராட்சி ஒன்றிய குழு தலைவா் தங்கதனம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உதவி பொறியாளா் சபரிநாதன், திருத்தணி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சந்தானம், ராஜேந்திர பாபு, ஊராட்சி மன்ற தலைவா் குப்பன், உள்ளாட்சி பிரதிநிதிகள், கற்போா் வட்டம் மைய பிரதிநிதி வினோத், பயிற்றுநா்கள், மாணவ, மாணவியா்கள், கலை குழுவினா், பொதுமக்கள் என பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com