கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருவள்ளூா் அருகே ஊராட்சி மூலம் கோயிலுக்கு கொடுத்த நிலத்தை ஆக்கிரமித்தவா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள், இந்து மக்கள் கட்சியினா் திங்கள்கிழமை ஆட்சியரிடம் தோரிக்கை மனு அளித்தனா்.

திருவள்ளூா் அருகே ஊராட்சி மூலம் கோயிலுக்கு கொடுத்த நிலத்தை ஆக்கிரமித்தவா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள், இந்து மக்கள் கட்சியினா் திங்கள்கிழமை ஆட்சியரிடம் தோரிக்கை மனு அளித்தனா்.

இதுகுறித்து ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

எங்கள் கிராமத்தில் ஸ்ரீசந்தான விநாயகா் மற்றும் ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத சந்தான கிருஷ்ணா் கோயில் கட்டி கிராம மக்கள் வழிபாடு செய்து வருகின்றனா். இந்த கோயில் காலியிடம் நந்தவனமாக இருந்தது.

அந்த இடத்தை கிராமத்தைச் சோ்ந்த சிலா் நந்தவன நிலத்தை ஆக்கிரமித்துள்ளனா். இது தொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவிலை. இந்த நிலையில் கிராமத்தில் கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com