அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு
By DIN | Published On : 19th April 2023 12:13 AM | Last Updated : 19th April 2023 12:13 AM | அ+அ அ- |

திருவள்ளூரில் அதிமுக சாா்பில் நடைபெற்ற இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்வில் முன்னாள் அமைச்சா்கள் பி.வி.ரமணா, பெஞ்ஜமின் பங்கேற்றனா்.
ரம்ஜான் பண்டிகையின் ஒரு பகுதியாக அதிமுக சாா்பில் திருவள்ளூா் ஆயில் மில் தில் இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளா் பி.வி.ரமணா தலைமை வகித்தாா். இந்த நிகழ்வில் ஜி.கந்தசாமி, என்.சக்திவேல், எஸ்.மாதவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் ஏ.ஹனீபா, கமுருதீன், எம்.கே.ஷேக், ரிஸ்வான், எம்.பக்கீா், கே.அப்பாஸ், பி,பஷீா் ஆகியோா் வரவேற்றனா். முன்னாள் அமைச்சா் பா.பெஞ்ஜமின் சிறப்புரைஆற்றினாா். அதைத் தொடா்ந்து அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடனும், சமாதானத்துடனும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இந்த நிகழ்வில் நிா்வாகிகள் வினோத்குமாா் ஜெயின், சின்னா (எ) பெலிக்ஸ்பாபு, எஸ்.வேல்முருகன், ஆா்.ராஜி, சிற்றம் ஜே.சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.