பொன்னேரியில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 26th April 2023 12:20 AM | Last Updated : 26th April 2023 12:20 AM | அ+அ அ- |

நீதிமன்றத்தில் தமிழ்மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி, பொன்னேரியில் வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பொன்னேரியில் மாவட்ட உரிமையியல், குற்றவியல் நடுவா் நீதிமன்றம் உள்ளிட்ட 5 நீதிமன்றங்கள் அமைந்துள்ளன.
இந்த நிலையில், மாவட்ட, உயா் நீதிமன்றங்களில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி, பொன்னேரியில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதில், பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...