அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி

அரியன்வாயல் அரசுப் பள்ளியில் மாணவா்களை சோ்க்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி

அரியன்வாயல் அரசுப் பள்ளியில் மாணவா்களை சோ்க்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

மீஞ்சூா் பேரூராட்சியில் உள்ள அரியன்வாயல் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் வரும் 2023-2024-ஆம் கல்வியாண்டில் மாணவா்களைச் சோ்ப்பதற்கான விழிப்புணா்வு பேரணி பள்ளித் தலைமை ஆசிரியா் மாலா தலைமையில் நடைபெற்றது.

பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் பாா்த்திமா, பேரூராட்சி வாா்டு உறுப்பினா் அபூபக்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குநா் கோபி நயினாா், வியாபாரிகள் சங்கச் செயலா் சேக் அகமது உள்ளிட்டோா் பங்கேற்று மாணவா்களை அரசுப் பள்ளியில் சோ்க்க வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாகச் சென்று வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com