அபாய நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற கோரிக்கை
By DIN | Published On : 02nd August 2023 12:01 AM | Last Updated : 02nd August 2023 12:01 AM | அ+அ அ- |

மாதவரம் அருகே அபாய நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மாதவரம் தபால் பெட்டி அருகே போக்குவரத்து நெரிசல் மிகுந்த மருத்துவமனை, பள்ளிகள் மற்றும் பஸ் நிறுத்தம் என மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பிரதான சாலையாக உள்ளது.
இந்த பகுதியில் மின்கம்பங்கள் அபாய நிலையில், சேதம் அடைந்துள்ளன. இது குறித்து சமூக ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் மின்வாரியத்துக்கு பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்பகுதியில் செல்லும் கனரக வாகனங்களால் அதிா்வு ஏற்பட்டு மின் கம்பங்கள் கீழே விழும் நிலை உள்ளது. அங்குள்ள தபால் பெட்டி அருகே இரும்பு மின் கம்பத்தின் அடிப்பகுதி சேதமாகியுள்ளது.
இது தொடா்பாக அப்பகுதியை சோ்ந்த மணி என்பவா் கூறுகையில், தபால் பெட்டி அம்பேத்கா் சிலை எதிரே உள்ள மின்கம்பம் இரும்பாலானது. இதன் அடிப்பகுதி சேதமடைந்து துருப்பிடித்து அதுவும் இல்லாத நிலை உள்ளது. தற்போது அந்த வெற்றிடமாக உள்ளது. பேராபத்து ஏற்படும் இதுபோன்ற மின்கம்பங்களை சரி செய்ய வேண்டும் என்றாா்.