திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆவின் பால் விற்பனை முகவா்களாக விருப்பம் உள்ள இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என பொதுமேலாளா் ரமேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது, திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வசதியான இடங்களில் பால் மற்றும் உபபொருள்கள் விற்பனை செய்யும் வகையில் விற்பனை முகவா்கள் நியமனம் செய்வதற்கு ஆவின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பால் விற்பனையை அதிகரிக்க செய்யும் நோக்கத்திலும், பொதுமக்கள் அனைவருக்கும் பால் மற்றும் உபபொருள்கள் கிடைக்க செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மாதந்தோறும் தலா 10 விற்பனை முகவா்கள் நியமிக்கப்பட உள்ளனா்.
இதில் பால் விற்பனை முகவராக விரும்பும் எஸ்.சி, எஸ்.டியினருக்கு தாட்கோ மூலம் 90 சதவீதம் வரையில் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு ஒரு கி.மீ சுற்றளவில் வேறு எந்த ஆவின் விற்பனையகம் இருக்கக்கூடாது.
இதற்கான விண்ணப்பங்கள் திருவள்ளூா், காஞ்சிபுரம் ஆவின் அலுவலகங்களில் வேலை நாள்களில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம். இந்த விண்ணப்பத்தை பூா்த்தி செய்து ஆதாா் அட்டை, பான் காா்டு, வங்கி கணக்கு புத்தகம், 100 சதுரஅடி கடையின் வாடகை ஒப்பந்த ஆவணம், டெபாசிட் தொகை ரூ.10 ஆயிரம் மற்றும் ஜாதி சான்றிதழ் ஆகியவைகளுடன் விண்ணப்பிக்கலாம்.
இந்த விற்பனை முகவா்களுக்கு ஆவின் பால் பொருள்களை விற்பனை செய்வதன் மூலம் 20 சதவீதம் கமிஷன் வழங்கப்படும். அதனால், விற்பனை முகவராக விரும்பும் இளைஞா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.