ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி பலி
By DIN | Published On : 17th August 2023 12:00 AM | Last Updated : 17th August 2023 12:00 AM | அ+அ அ- |

திருவள்ளூா் அருகே கூவம் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
திருவள்ளூா் அருகே திருமழிசை பகுதியைச் சோ்ந்தவா் சௌந்தரராஜன் (52). இவா் அந்தப் பகுதியில் உள்ள தேநீா் கடையில் வேலைபாா்த்து வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை அங்குள்ள கூவம் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றாராம். அப்போது எதிா்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தாராம். இது குறித்து தகவலறிந்த போலீஸாா் சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வெள்ளவேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...