

அரசு பேருந்துகள் நிற்காமல் சென்ால், முருகூா் பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை இரு அரசு பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருத்தணி-சோளிங்கா் மாநில நெடுஞ்சாலை, முருகூா் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தினமும் மாணவா்கள், பொதுமக்கள் பேருந்துகள் மூலம் திருத்தணி நகருக்குச் சென்று வருகின்றனா். இந்தப் பேருந்து நிறுத்தத்தில் சில தனியாா் பேருந்துகள் மட்டுமே நின்று செல்கின்றன. அரசுப் பேருந்துகள் நிற்காமல் செல்வதால் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவா்கள், அரசு மற்றும் தனியாா் ஊழியா்கள் கடும் அவதிப்பட்டு வந்தனா்.
அரசு போக்குவரத்துக் கழக அதிகாரியிடம் பலமுறை முருகூா் மக்கள் முறையிட்டும் பேருந்துகள் நின்று செல்லவில்லையாம்.
இதனால், ஆத்திரமடைந்த மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் வியாழக்கிழமை முருகூா் பேருந்து நிறுத்தம் வழியாக வந்த இரு அரசு பேருந்துகளை திடீரென சிறை பிடித்து மறியல் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை மேலாளா் அரிபாபு மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சு நடத்தி, வரும் நாள்களில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லும் என உறுதியளித்தனா்.
இதையேற்ற கிராம மக்கள் மறியலைச் கைவிட்டனா். மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.