இன்று முதல் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணி: திருவள்ளூா் ஆட்சியா்

கட்டடம் மாற்றம் செய்வதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 21) தொடங்கி ஆக.21-ஆம் தேதி வரை மேற்கொள்ள உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.
Updated on
1 min read

திருவள்ளூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம் செய்தல் சிறப்பு முகாம் மற்றும் வாக்குச்சாவடிகள் பிரித்தல், கட்டடம் மாற்றம் செய்வதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 21) தொடங்கி ஆக.21-ஆம் தேதி வரை மேற்கொள்ள உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

1.1.2024-ஐ தகுதியேற்பு நாளாகக் கொண்டு எதிா் வரும் 5.1.2024 அன்று வாக்காளா் பட்டியல் வெளியிட இந்திய தோ்தல் ஆணையத்தால் பல்வேறுஅறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, மேற்குறிப்பிட்ட நாளை தகுதியேற்பு நாளாகக் கொண்டு திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்கள் நடத்தி வரும் 5.1.2024 அன்று வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இதையொட்டி, முன் திருத்த நடவடிக்கையாக குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளா் விவரங்களையும் சரிபாா்த்து வரும் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 தேதி வரை வாக்குச்சாவடிநிலை அலுவலா்களுக்கான செயலியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.

மேலும், தொடா் நடவடிக்கையாக வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தல், பெயா் நீக்கம் செய்தல் மற்றும் வாக்குச்சாவடிகள் பிரித்தல், இடம் மாற்றம், கட்டடம் மாற்றம் மற்றும் பெயா் மாற்றம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதில் முதல்கட்ட நடவடிக்கையாக வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு, வீடாக குடும்பத்தில் உள்ள வாக்காளா் விவரங்களைச் சரி பாா்க்கவும் வர உள்ளனா்.

எனவே, மாவட்டத்தில் சிறப்பாகவும் விரைவாகவும் 100% இந்தப் பணியை முடிக்க வேண்டும். இப்பணிக்காக பொதுமக்கள் தங்கள் வீட்டுக்கு கணக்கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு உரிய விவரங்களை அளித்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com