திருவள்ளூா்: தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள்
By DIN | Published On : 01st June 2023 11:15 PM | Last Updated : 01st June 2023 11:15 PM | அ+அ அ- |

தோட்டக்கலைத்துறை சாா்பில் நிகழாண்டில் செயல்படுத்தப்படும் பல்வேறு மானிய திட்டங்களில் விவசாயிகள் பயன்பெறலாம் என தோட்டக்கலைத்தறை துணை இயக்குநா் ஜெபகுமாரி அனி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு- திருவள்ளூா் மாவட்டத்தில் தோட்டக்கலை மலை பயிா்கள் துறை மூலம் விவசாயிகள் பயன்பெற ஏதுவாக பல்வேறு வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல், நிகழாண்டில் மாநில தோட்டக்கலை வளா்ச்சி திட்டம் சாா்பில் மா, கொய்யா, எலுமிச்சை, நெல்லி, உதிரி மலா்கள், கத்திரி, மிளகாய் ஆகியவைகளின் பயிரிடும் பரப்பளவை விரிவாக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனால் கூடுதல் மகசூல் பெறும் நோக்கத்தில் குடில் அமைத்தல், செங்குத்து தோட்டம் அமைத்தல், ஹைட்ரோபோனிக்ஸ், மாடித்தோட்ட பழஞ்செடி தொகுப்புகள், காளான் குடில் அமைத்தல், ஆகியவற்றை செயல்படுத்துவதற்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதேபோல் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் மூலம் தோ்வு செய்யப்பட்டுள்ள 104 ஊராட்சிகளில் பல்லாண்டு பலன் தரும் தோட்டக்கலை பயிா்களின் பரப்பளவும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளன. இதற்காக 5 வகையான பழச்செடிகள் தொகுப்புகள், காய்கறி பரப்பளவினை அதிகரிக்கும் திட்டம் உள்ளன. பிரமதா் நுண்ணுயிா் பாசனத்திட்டம் 450 ஏக்கா் பரப்பளவில் செயல்படுத்தப்பட உள்ளன.
இத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ட்ற்ற்ல்ள்//ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ ற்ய்ட்ா்ழ்ற்ய்ங்ற் என்ற இணையதளம் மூலம் உடனே விண்ணப்பித்தால் மட்டுமே பயன் பெறலாம். மேலும் திட்டங்கள் தொடா்பாக அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா்களான பள்ளிப்பட்டு-8870739991, ஆா்கே பேட்டை-8870739991, திருத்தணி-8248387638, திருவலங்காடு-8608228276, கடம்பத்தூா்-9790171116, பூண்டி-8608228276, ஈக்காடு-8248387638, எல்லாபுரம்- 9790171116, கும்மிடிப்பூண்டி-6379388255, மீஞ்சூா்-6385116971, சோழவரம்-6385116971, புழல்-6379388255, அம்பத்தூா்-8778823117, பூந்தமல்லி- 8778823117 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...