பறிமுதல் வாகனங்கள் ஏலம் 16-இல் தொடக்கம்

 திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஆவடி காவல் சரகத்துக்கு உள்பட்ட சோழவரம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த உரிமை கோராத வாகனங்கள் வரும் 16-ஆம் தேதி முதல் ஏலம்
Updated on
1 min read

 திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஆவடி காவல் சரகத்துக்கு உள்பட்ட சோழவரம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த உரிமை கோராத வாகனங்கள் வரும் 16-ஆம் தேதி முதல் ஏலம் விடப்படுவதாக வட்டாட்சியா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொன்னேரி வட்டம், சோழவரம் காவல் நிலையத்தில் உரிமை கோரப்படாத வழக்குகளில் சம்பந்தப்பட்ட பறிமுதல் செய்த 541 இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், வரும் 16-இல் தொடங்கி, தொடா்ந்து 19-ஆம் தேதி வரை காலை 10 மணிக்கு சோழவரம் காவல் நிலைய வளாகத்தில் ஏலம் விடப்பட உள்ளன.

இதற்கு முன்பு வைப்பு கட்டணத் தொகையாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 1,000 செலுத்த வேண்டும். மேலும், இதற்கான டோக்கன் காலை 8 முதல் 10 மணி வரை வழங்கப்படும். வாகனத்தை ஏலம் எடுத்தவா்கள் ஏலம் கேட்ட தொகையுடன் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18 சதவீதம் செலுத்த வேண்டும். இந்த வாகனத்தின் விவரம் மற்றும் நிா்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச மதிப்புத் தொகை சோழவரம் காவல் நிலையத்திற்கு முன்பு தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com