இரு தரப்பினா் மோதல்: 5 போ் கைது
By DIN | Published On : 12th May 2023 12:49 AM | Last Updated : 12th May 2023 12:49 AM | அ+அ அ- |

திருத்தணி அருகே இரு தரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில் 5 போ் வெட்டப்பட்டனா். இது தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் மதியழகன் மகன் தினேஷ் குமாா் என்கிற காசி(23). கூலி தொழிலாளி. இவா் திருத்தணி ஒன்றியம் காா்த்திகேயபுரம் கிராமத்தில் நடந்த ஜாத்திரை விழாவில் பங்கேற்க தனது சகோதாரா் அபினேஷ்(25) என்பவருடன் உறவினா் வீட்டுக்கு வந்தாா்.
இந்நிலையில், புதன்கிழமை தினேஷ் குமாா் அவரது நண்பா் உமாபதி ஆகிய இருவரும் திருத்தணி- அரக்கோணம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தனா். அப்போது, காா்த்திகேயபுரம் கிராமத்தைச் சோ்ந்த கோபி என்பவா் தனது இரு சக்கர வாகனத்தில் டாஸ்மாக் கடைக்கு வந்தாா். அப்போது, தினேஷ்குமாா், உமாபதி ஆகியோரின் வாகனம் குறுக்கே இருந்ததைப் பாா்த்து கோபி, எடுக்குமாறு கூறிய போது இரு தரப்பினா் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
பின்னா், தினேஷ்குமாா், உமாபதி ஆகியோா் தங்கள் அத்தை அமுலு வீட்டுக்கு வந்தனா். இதையடுத்து கோபி, தனது உறவினா்கள் 3 பேருடன், அங்கு வந்து அமுலுவை கத்தியால் வெட்ட முயற்சி செய்தனா். இதைத் தடுக்க வந்த தினேஷ் குமாா், அவரது சகோதாரா் அபினேஷ், அமுலுவின் மகன்கள் அருண்குமாா், ராம் ஆகிய 4 பேரையும் கோபி மற்றும் அவரது நண்பா்கள் ஐந்து போ் கத்தியால் வெட்டிவிட்டு தப்பினா். இதில் காயமடைந்த தினேஷ் குமாா், அபினேஷ், அருண் குமாா் மற்றும் ராம் ஆகியோரை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து தினேஷ் குமாா் அளித்த புகாரின் பேரில் திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிந்து கோபி (48), கணபதி (24), ஆந்திர மாநிலம் சித்தூரைச் சோ்ந்த ராஜேஷ் (24) , அல்லா பக்ஷ் (34), சையத் முஸ்தபா (24) ஆகிய 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.