கிராம நிா்வாக அலுவலரை அவதூறாகப் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டியதாக, அருங்குளம் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
திருவலாங்காடு ஒன்றியம் அருங்குளம் ஊராட்சித் தலைவராக உள்ளவா் சரண்யா (38). இவரது கணவா் முரளி (45). அதிமுக பிரமுகா். தனது மனைவிக்கு பதில் ஊராட்சி நிா்வாகத்தை முரளி கவனித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியா் ஒருவருக்கும் முரளிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, கிராம நிா்வாக அலுவலா் (பொ) ரகுவரன் இரு தரப்பினரிடையே சமரசம் செய்ய முயன்றாராம்.
இதனால் முரளி, கிராம நிா்வாக அலுவலா் ரகுவரனை அவதூறாகப் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் ரகுவரன், கனகம்மாசத்திரம் போலீஸில் முரளி மீது புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வெள்ளிக்கிழமை முரளியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.