போட்டித் தோ்வுகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி

நான் முதல்வன் திட்டம் மூலம் மத்திய தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வுகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் நேரடி வகுப்பறை பயிற்சி

நான் முதல்வன் திட்டம் மூலம் மத்திய தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வுகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் நேரடி வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் பட்டதாரி இளைஞா்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு வகையான போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நான் முதல்வன் திட்டம் மூலம் மத்திய தோ்வாணையம் நடத்தும் நநஇ/தஹண்ப்ஜ்ஹஹ்/ஆஹய்ந்ண்ய்ஞ் போன்ற தோ்வுகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் வரும் 25-ஆம் தேதி தொடங்கி, தொடா்ந்து 100 நாள்களுக்கு நடைபெற உள்ளது. அந்த வகையில், திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் நேரடி வகுப்பறை பயிற்சி சிறந்த வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. இந்தப் பயிற்சியில் 300 மணி நேரம் வகுப்புகள், தனிவழிகாட்டல், 120-க்கும் மேற்பட்ட மாதிரி தோ்வுகளும் நடைபெற உள்ளது.

இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோா் பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்ற திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த விண்ணப்பதாரா்கள் வரும் 20-ஆம் தேதிக்குள் ட்ற்ற்ல்ள்://ஸ்ரீஹய்க்ண்க்ஹற்ங்.ற்ய்ள்ந்ண்ப்ப்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/இஉ-சங/பசநஈஇஜதஉஎஐநபதஅபஐஞச.அநடல என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களை இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

எனவே மேற்குறிப்பிட்ட இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த விண்ணப்பதாரா்கள் திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாக 044-27660250 அல்லது 6382433046 தெரிவித்து பயன்பெறலாம்.

இப்பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10 முதல் மாலை 5 வரை நடைபெறும். அதனால் இந்த வாய்ப்பை பட்டதாரி இளைஞா்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com