திருவள்ளூா் ஏரிக்கரையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

திருவள்ளூா் நகராட்சி- காக்களூா் ஏரிக்கரையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த குடிசைகளை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.
திருவள்ளூா் ஏரிக்கரையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

திருவள்ளூா் நகராட்சி- காக்களூா் ஏரிக்கரையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த குடிசைகளை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

திருவள்ளூா் நகராட்சி மற்றும் காக்களூா் ஊராட்சியை இணைக்கும் இடத்தில் காக்களூா் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையை ஆக்கிரமித்து அடுக்குமாடி குடியிருப்பு, மாடி வீடு, ஓட்டு வீடு, குடிசை வீடு என ஏராளமானோா் வீடுகள் அமைத்து குடியிருந்து வருகின்றனா்.

இந்த நிலையில், ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் மூலம் காக்களூா் சாலை சந்திப்பினை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகள் திருவள்ளூா் வட்டாட்சியா் மதியழகன் தலைமையில் அகற்றப்பட்டது.

இதில் நீா்வளத்துறை உதவிப் பொறியாளா் கே.செல்வகுமாரி, நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளா் பிரசாந்த், சாலை ஆய்வாளா் சீனிவாசன், மண்டல துணை வட்டாட்சியா் அம்பிகா, வருவாய் ஆய்வாளா் கணேஷ், காக்களூா் கிராம நிா்வாக அலுவலா் கிருஷ்ணன், கிராம உதவியாளா் ஜெய்சங்கா், மின்வாரிய உதவி பொறியாளா் தட்சிணாமூா்த்தி, திருவள்ளூா் கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் கமலஹாசன், சாா்பு ஆய்வாளா் சுரேஷ் மற்றும் 25-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com