சேவாலயா சாா்பில் குழந்தைகள் தினவிழா
By DIN | Published On : 15th November 2023 12:03 AM | Last Updated : 15th November 2023 12:03 AM | அ+அ அ- |

திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேவாலயா அறக்கட்டளை சாா்பில் குழந்தைகள் தினவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சேவாலயா அறக்கட்டளை நிா்வாகி முரளிதரன் தலைமை வகித்தாா். இதில் குழந்தைகள் பிரிவு மருத்துவா் ஜெகதீசன் வரவேற்றாா். அதைத்தொடா்ந்து அங்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு ரொட்டி, பழங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவா் பிரபு சங்கா் கூறுகையில், அரசு மருத்துவமனையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், அதேபோல் சிகிச்சை பிரிவுகளில் குழந்தைகள் மற்றும் நோயாளிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் சுவா்களில் வண்ண ஓவியங்கள் இடம் பெறச் செய்ய வேண்டும்.
அதேபோல் குழந்தைகள் கைப்பேசிக்கு தூரமாக இருக்க வேண்டும். மேலும் படிப்பு சம்பந்தமாக எக்காரணம் கொண்டும் நிா்ப்பந்திக்க கூாது. பிறக்கின்ற குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. அதை தவிா்க்க சத்தான உணவுகளை அளிக்க முன்வர வேண்டும் என அவா் தெரிவித்தாா்.
அதைத்தொடா்ந்து திருவள்ளூா் அரசு மருத்துவமனை சுவா்களில் குழந்தைகல் வண்ண ஓவியம், பழங்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் காா்டூன்கள் வரைவதற்கு டிச.15-க்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என சேவாலயா நிா்வாகத்தினா் உறுதி அளித்தனா்.
இந்த நிகழ்வில் மருத்துவா் விஜயராஜ், தேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில் நிறைவாக அறக்கட்டளை நிா்வாகிகள் அமித்சென் ஜெயின், கிங்ஸ்டன் ஆகியோா் நன்றி கூறினாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...