திருவள்ளூரில் பழங்குடியினருக்கு ஜாதி சான்றிதழ்
By DIN | Published On : 10th September 2023 06:31 AM | Last Updated : 10th September 2023 06:31 AM | அ+அ அ- |

09tlrmllaa_0909chn_182_1
திருவள்ளூா் நகராட்சியில் உள்ள பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு ஜாதி சான்றிதழ்களை சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் வழங்கினாா்.
திருவள்ளூா் நகராட்சி 26-ஆவது வாா்டு பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட இருளா் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களின் குழந்தைகள் பள்ளிகளில் படித்து வருகின்றனா். அதனால், அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஜாதி சான்றிதழ் அவசியமாகிறது. அதனால், பழங்குடியினருக்கான சான்றிதழ் வழங்கவும் மாவட்ட நிா்வாகம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனா். அதன் அடிப்படையில் திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகம் மூலம் இருளா் குடும்பத்தில் படிக்கும் மாணவ, மாணவிகளின் 50 போ் விவரங்கள் சேகரித்து, ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்த வகையில், திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் பழங்குடியினருக்கான ஜாதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் தலைமை வகித்தாா். இதில் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் பங்கேற்று இருளா் குடும்பங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஜாதி சான்றிதழ்களை வழங்கினாா். இதேபோல், இந்த நிகழ்ச்சி மூலம் 50 பேருக்கு ஜாதி சான்றுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் 26-ஆவது வாா்டு உறுப்பினா் தனலட்சுமி, ஒன்றியக் குழு உறுப்பினா் மஞ்சு லிங்கேஷ், முன்னாள் நகா்மன்றத் தலைவா் பொன்.பாண்டியன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் விஜயகுமாரி சரவணன், தமிழ்நாடு அரசு தூய்மை பணியாளா்கள் நலவாரிய மாநில உறுப்பினா் ஹரிஷ்குமாா், நிா்வாகிகள் நேதாஜி, கமலக்கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.