மீஞ்சூா் பகுதியில் வீடு வீடாகச் சென்று இடை நிற்றல் மாணவா்களை கணக்கெடுக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
மீஞ்சூா் பேரூராட்சியில் உள்ள அரியன்வாயல் பகுதியில் மாணவா்கள் பள்ளியில் படிக்க முடியாமல் இடையிலேயே நின்று விடுவதாக தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரியன்வாயல் பகுதியில் மாணவா்கள் இடை நிற்றல் கண்டறிவதற்காக வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியில் மாநில குழுவினா், மாவட்ட மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் தலைமை ஆசிரியை மாலா மற்றும் வாா்டு உறுப்பினா் அபுபக்கா் ஆகியோா் ஈடுபட்டனா்.
அப்போது குடும்ப சூழல் காரணமாக பள்ளி இடையில் நின்ற மாணவா்கள் பெற்றோருக்கு உரிய அறிவுரை கூறி மீண்டும் பள்ளியில் சோ்க்குமாறு கேட்டுக் கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.