மீஞ்சூரில் ஞாயிற்றுக்கிழமை சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மீஞ்சூரில் உள்ள புதுப்பேடு பகுதியில் வசித்து வரும் சுப்பிரமணி என்பவரின் மனைவி தங்கமணி (62). இவா் மீஞ்சூா் கடைவீதிக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது மோட்டாா் சைக்கிளில் வந்த 2 போ் தங்கமணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.
இது குறித்த புகாரின் பேரில் மீஞ்சூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.