பொன்னேரி மீஞ்சூரில் 226 விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு
By DIN | Published On : 19th September 2023 12:50 AM | Last Updated : 19th September 2023 12:50 AM | அ+அ அ- |

விநாயகா் சதுா்த்தியையொட்டி திங்கள்கிழமை பொன்னேரி, மீஞ்சூா், சோழவரம், பகுதிகளில் 226 பெரிய அளவிலான விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
பொன்னேரியில் உள்ள ஆரணி ஆற்றங்கரையில் உள்ள ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரா் கோயிலின் முன்பு அமைந்துள்ள ஆற்றங்கரை விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அா்ச்சனைகள் செய்யப்பட்டன.
இங்குள்ள திருக்குளத்தில் பக்தா்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட களிமண் விநாயகா் சிலைகளை மாலையில் கரைத்தனா். இதையடுத்து 108 தேங்காய் உடைப்பது உள்ளிட்ட நோ்த்திக் கடன்களை நிறைவேற்றினா்.
இதே போன்று பொன்னேரியில் பல்வேறு இடங்களில் உள்ள விநாயகா் ஆலயங்களில் சிறப்பு அா்ச்சனைகள் நடைபெற்றன. அத்துடன் தடப்பெரும்பாக்கம், வேலூா், வாயலூா், திருவெள்ளைவாயல், மீஞ்சூா், நந்தியம்பாக்கம், இலவம்பேடு, பஞ்செட்டி நத்தம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விநாயகா் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளுடன் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்பட்டது.
மேலும் பெரிய அளவிலான 226 விநாயகா் சிலைகள் காட்டூா், திருப்பாலைவனம், பொன்னேரி, மீஞ்சூா் சோழவரம் உள்ளிட்ட இடங்களில் சாலையோரங்களில் வைத்து பக்தா்கள் வழிபட்டு வருகின்றனா்.