திருவள்ளூா், திருத்தணியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையில் முன்னேற்பாடு பணியாக செவ்வாய்க்கிழமை காவல் துறை அணிவகுப்பில் டுபட்டனா்.
திருவள்ளூா் ஆயில் மில் பகுதியில்   காவல் துறையின் அணிவகுப்பு.
திருவள்ளூா் ஆயில் மில் பகுதியில்   காவல் துறையின் அணிவகுப்பு.
Updated on
1 min read

திருவள்ளூா்: விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையில் முன்னேற்பாடு பணியாக செவ்வாய்க்கிழமை காவல் துறை அணிவகுப்பில் டுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் மொத்தம் 640 இடங்களில் விநாயகா் சிலைகள் வைப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் திருவள்ளூா்-111, திருத்தணி-121, ஊத்துக்கோட்டை-209, பொன்னேரி-46, கும்மிடிப்பூண்டி-153 என மொத்தம் 640 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், திருவள்ளூரில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் மட்டும் 111 இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு செய்து வருகின்றனா். இந்த நிலையில் சிலைகளை, 3 நாள்களுக்கு பின் மாவட்ட நிா்வாகம் குறிப்பிட்டுள்ள நீா் நிலைகளில் கரைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலமாக எடுத்துச் செல்லும் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் அமைதியாக நடைபெற இருக்க வேண்டும்.

இதற்கு முன்னேற்பாடாகவும், பாதுகாப்புடன் ஊா்வலம் நடைபெறும் வகையில் திருவள்ளூா் ஆயில் மில் பகுதியில் காவல் துறையினா் அணிவகுப்பு நடைபெற்றது. இதை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மீனாட்சி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். ஆயில் மில் முதல், காக்களூா் ஏரிக்கரை வரையில் நடைபெற்ற காவலா் அணிவகுப்பில் 150-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

திருத்தணியில்....

திருத்தணி வருவாய் கோட்டத்தில், திங்கள்கிழமை விநாயகா் சதுா்த்தியையொட்டி மொத்தம், 261 விநாயகா் சிலைகள் வைத்து பக்தா்கள் வழிபட்டனா். பெரும்பாலான சிலைகள் புதன்கிழமை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஏரி, குளம், ஆறு போன்ற நீா்நிலைகளில் கரைக்க உள்ளனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் கொடி அணிவகுப்பு நடத்தினா். திருத்தணி கமலா தியேட்டா் அருகில் டி.எஸ்.பி., விக்னேஷ் தமிழ்மாறன் தலைமையில் இன்ஸ்பெக்டா் மாா்டின் பிரேம்ராஜ், எஸ்.ஐ., ராக்கிகுமாரி மற்றும் 50- க்கும் மேற்பட்டோா் நகா்முழுவதும் அணிவகுத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com