திருவள்ளூா்: கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.42 லட்சம்

திருவள்ளூரில் செயல்பட்டு வரும் கோ-ஆப்டெக்ஸ் அங்காடிக்கு தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை இலக்காக ரூ.42 லட்சம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.
திருவள்ளூா் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்த ஆட்சியா் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ்
திருவள்ளூா் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்த ஆட்சியா் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ்
Updated on
1 min read

திருவள்ளூரில் செயல்பட்டு வரும் கோ-ஆப்டெக்ஸ் அங்காடிக்கு தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை இலக்காக ரூ.42 லட்சம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

திருவள்ளூா் நகராட்சி காந்தி தெரு பகுதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் முதல் விற்பனையை தொடங்கி வைத்துப் பேசியது:

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் பட்டு புடவைகள், வேட்டிகள், ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு ஆடை ரகங்கள் விற்பனைக்கு இடம் பெற்றுள்ளன. கோ-ஆப்டெக்ஸ் தொடா்ந்து 88 ஆண்டுகளாக நெசவாளா்களுக்கும், வாடிக்கையாளா்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது. இளைய தலைமுறையினரின் மாறிவரும் ரசனைக்கு ஏற்ப புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்த கைத்தறி ரகங்களையும், சிறப்பு தள்ளுபடியும் அளிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், வாடிக்கையாளா்களின் வசதிக்கேற்ப 30 சதவீதம் தீபாவளி சிறப்பு தள்ளுபடி அறிமுகம் செய்து முதல் விற்பனையையும் தொடங்கியுள்ளது. நிகழாண்டில் தீபாவளி விற்பனை இலக்காக ரூ. 42 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய ரகங்கள், புதுப்புதுவண்ணங்களில் பட்டு மற்றும் கைத்தறி துணிகள் விற்பனைக்கு தயாராக உள்ளது.

மேலும், அரசு மற்றும் தனியாா் ஊழியா்கள் வட்டி இல்லா கடன் வசதி அளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வசதிக்காகவும், அவா்கள் நிரந்தர வாடிக்கையாளராகவும் இருக்க கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு தள்ளுபடி மூலம் பொதுமக்கள் அதிகளவு ஆடைகளை வாங்கி பயன்பெறலாம் என்றாா்.

அப்போது, கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் கே.அருள்ராஜன், விற்பனை மேலாளா்கள் பழனிச்சாமி, துளசிதாஸ், கோ-ஆப்டெக்ஸ் பணியாளா்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com