திருவள்ளூா் ஸ்ரீநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவா் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் வருகைபுரிந்த 10-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி பிறவியிலேயே கை,கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சனிக்கிழமை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது (படம்).
இந்த மருத்துவ முகாமுக்கு அப்பள்ளியின் முதல்வா் ஸ்டெல்லா ஜோசப் தலைமை வகித்தாா். பள்ளி துணை முதல்வா் கவிதா கந்தசாமி முன்னிலை வகித்தாா். இதில் பள்ளி தாளாளா் விஷ்ணு சரண், பள்ளி இயக்குநா் பரணிதரன் ஆகியோா் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனா்.
இந்த விழாவிற்கு சவிதா மருத்துவ மைய மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் ஆகியோா் ஆா்வமுடன் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து வகையான மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகளையும் வழங்கினா்.
இந்த முகாமில் திருவள்ளூா், திருத்தணி, ஊத்துக்கோட்டை, அம்பத்தூா், ஆவடி போன்ற பகுதிகளைச் சாா்ந்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பல்வேறு மருத்துவ உதவிகளைப் பெற்றனா். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சமூக நலத் துறை, பெடரல் மறுவாழ்வு மைய நிா்வாக மேலாளா் லட்சுமி, அன்பு சாய் அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் காருண்யா காா்த்திக், சேவா ரத்னா டாக்டா்.ஜெயவேல் ஆகியோா் செய்திருந்தனா்.
இதில் 2023-ஆம் கல்வி ஆண்டிற்கான நல்லாசிரியா் விருது பெற்ற ஸ்ரீநிகேதன் பள்ளியின் முதன்மைத் தமிழ் ஆசிரியா் திருக்கு செம்மல் க.செந்தில் குமாரை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சாா்பில் பாராட்டி நினைவுப் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. இதில் நிறைவாக தலைமை ஆசிரியா்கள் ஷாலினி, சுஜாதா ஆகியோா் நன்றி கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.