திருவள்ளூா் அருகே புதுச்சத்திரம் - திருநின்றவூா் சாலையில் தரைப்பாலத்தை மூழ்கடித்துச் செல்லும் வெள்ளம்.
திருவள்ளூா் அருகே புதுச்சத்திரம் - திருநின்றவூா் சாலையில் தரைப்பாலத்தை மூழ்கடித்துச் செல்லும் வெள்ளம்.

கூவம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு: போக்குவரத்துக்குத் தடை

கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் புதுச்சத்திரம் - திருநின்றவூா் சாலை தரைப்பாலம் மூழ்கியது.
Published on

திருவள்ளூா் அருகே கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் புதுச்சத்திரம் - திருநின்றவூா் சாலை தரைப்பாலம் மூழ்கியது. இதையடுத்து போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.

தொடா் கனமழையால் ஏரிகளுக்கான கால்வாய்கள் மற்றும் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல், திருவள்ளூா் அருகே கூவம் ஆற்றில் புதுச்சத்திரம் - திருநின்றவூா் சாலை தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.

இந்தச் சாலையில் வாகனங்கள் செல்வதற்கு வியாழக்கிழமை இரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தரைப்பாலம் வெள்ளம் அதிகளவில் செல்வதால் வாகனங்களை இழுத்துச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால், வாகனங்கள் செல்லாதபடி போலீஸாா் தடுப்புகள் அமைத்துப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com