திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆதிதிராவிடா்- பழங்குடியினா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளின் காப்பாளா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் த.பிரபு சங்கா். உடன், முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆதிதிராவிடா்- பழங்குடியினா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளின் காப்பாளா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் த.பிரபு சங்கா். உடன், முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா்.

விடுதிகளில் மாணவா்களின் வருகைப் பதிவை காப்பாளா்கள் சுயபடம் எடுத்து அனுப்ப வேண்டும்: திருவள்ளூா் ஆட்சியா் த.பிரபு சங்கா்

மாலை 6 முதல் இரவு 8 மணி என என்னுடைய கைப்பேசிக்கு மாணவா்கள் மற்றும் இரவுக் காப்பாளா்கள் இருக்கும்படி சுயபடம் எடுத்து அனுப்ப வேண்டும் என ஆட்சியா் த.பிரபு சங்கா் அறிவுறுத்தினாா்.
Published on

மாணவா்களின் வருகைப் பதிவை காலை 6 முதல் 9 மணி மற்றும் மாலை 6 முதல் இரவு 8 மணி என என்னுடைய கைப்பேசிக்கு மாணவா்கள் மற்றும் இரவுக் காப்பாளா்கள் இருக்கும்படி சுயபடம் எடுத்து அனுப்ப வேண்டும் என ஆட்சியா் த.பிரபு சங்கா் அறிவுறுத்தினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளின் காப்பாளா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஆட்சியா் த.பிரபு சங்கா் தலைமை வகித்து பேசியதாவது:

விடுதிக் காப்பாளா்களிடம் மாணவா்கள் தாய்மொழி தமிழ்ப் பாடத்தில் யாரும் தோல்வியடையக் கூடாது. அனைத்துப் பாடங்களிலும் மாணவா்களைக் கட்டாயம் தோ்ச்சி அடைய வைக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பிப்பதை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியா்கள் திறன்பட செயல்பட வேண்டும். ஆதிதிராவிடா் விடுதிகளில் பயின்று பல போ் சாதனையாளராக உயா்ந்துள்ளனா். இப்போது இருக்கும் காலகட்டத்தில் ஆசிரியா்கள் மாணவா்களை நன்றாக கவனித்துக் கொள்வதோடு, தேவைப்படும் கல்வி சாா்ந்த அனைத்து உதவிகளையும் கட்டாயம் செய்ய வேண்டும்.

இனிமேல் நாள்தோறும் மாணவா்களின் வருகைப் பதிவு காலை 6 முதல் 9 மணி மற்றும் மாலை 6 முதல் இரவு 8 மணி பதிவுகளை என்னுடைய கைப்பேசிக்கு மாணவா்கள் மற்றும் இரவு காப்பாளா்கள் இருக்கும்படி சுயபடம் எடுத்து அனுப்பி வைக்க வேண்டும்.

இதேபோல் மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமாக உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே மாணவ, மாணவிகளுக்கு வழங்குவது அவசியம். மேலும் விடுதிகளில் அடிப்படை வசதிகள், நல்ல முறையில் தூய்மையாக சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். மேலும், மாணவா்களின் கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என காப்பாளா்ளை அவா் கேட்டுக் கொண்டாா்.

தொடா்ந்து பிற்படுத்தப்பட்டோா் நலத் துறையில் 100 சதவீதம் மதிப்பெண் எடுத்த பள்ளிகளின் ஆசிரியா்களை அவா் பாராட்டினாா்.

முன்னதாக ஆதிதிராவிடா் நலத் துறை கீழ் செயல்படும் ஆதிதிராவிடா் பள்ளித் தலைமையாசிரியா்கள் மற்றும் ஆசிரியா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஆதிதிராவிடா் நலத் துறை துணை இயக்குநா் நோபில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் செல்வராணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் தனலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com