ஆவடியில் காங்கிரஸ் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

ஆவடி சட்டப்பேரவை தொகுதி திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில், திருவள்ளூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் ஆவடி அருகே பட்டாபிராமில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூர் மத்திய திமுக மாவட்டச்செயலர் சா.மு.நாசர் எம்எல்ஏ தலைமை வகித்தார். திருவள்ளூர் மக்களவைத் தொகுதி திமுக தேர்தல் பார்வையாளர் ஆர்.கிரிராஜன் எம்.பி. கலந்து கொண்டு, வேட்பாளர் சசிகாந்த் செந்திலை அறிமுகப்படுத்தி வைத்தார். பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, ஆவடி மேயர் கு.உதயகுமார், துணை மேயர் எஸ்.சூரியகுமார், திமுக நிர்வாகிகள் சண்.பிரகாஷ், ஜி.ராஜேந்திரன், பேபி சேகர், ஜி.நாராயணபிரசாத், பொன்.விஜயன், என்.இ.கே.மூர்த்தி, தி.வை.ரவி, காங்கிரஸ் மாநில நிர்வாகி எஸ்.பவன்குமார், மாவட்டத் தலைவர் இ.யுவராஜ், துணைத் தலைவர் விக்டரி மோகன், முன்னாள் தலைவர்கள் பூவை ஜேம்ஸ், ஏ.ஜி.சிதம்பரம், டி.ரமேஷ், மதிமுக தேர்தல் பணிக்குழுச் செயலர் இரா.அந்திரிதாஸ், மாவட்டச் செயலர் மு.பாபு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர்கள் மு.ஆதவன், அருண் கெüதமன், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கோபால், பூபாலன், மயில்வாகனன், கபாலி மற்றும் பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com