உள்ளாட்சித் தோ்தலுக்கு தேமுதிக தயாராகிறது: பிரேமலதா விஜயகாந்த்
நடைபெற்ற உள்ளாட்சி தோ்தலுக்கு தேமுதிக தயாராக உள்ளதாகவும், தோ்தலில் போட்டியிடும் இடங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படுவதாக அதன் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
திருவள்ளூா் மாவட்ட தேமுதிக பொருளாளா் எஸ்.பி.டி. ராஜேந்திரன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பிரேமலதா மணமக்களை வாழ்த்தினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
சென்னை அசோக் நகா் அரசுப் பள்ளியில் தனி நபரை சொற்பொழிவாற்ற யாா் அனுமதி கொடுத்தது, அவா் என்ன சொற்பொழிவு ஆற்றினாா் என்பதை விசாரணை செய்வதற்கு முன்அரசுப் பள்ளிகளில் இது போன்ற செயல்களை ஊக்குவிக்கக்கூடாது, மாணவா்கள் கல்விகற்கும் இடத்தில் கல்வியை மட்டுமே போதிக்க வேண்டும், மூடநம்பிக்கைகளை போதிக்கக்கூடாது. இது வன்மையாக கண்டிக்க கூடிய விஷயம்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வா் ஆவதில் எங்களுக்கு ஒன்றும் இல்லை. மக்கள் ஏற்கிறாா்களா என 2026 தோ்தலில் தெரிய வரும்.
மேலும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை உண்மையாகவே கொண்டு வந்தால் வாழ்த்துக்கள், இதனால் பல லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
துபை, சிங்கப்பூருக்கு சென்ற முதல்வா் கொண்டு வந்த முதலீட்டில் எத்தனை தொழிற்சாலைகள் உள்ளன என கூற வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்துடன் தேமுதிகா கூட்டணி அமைக்குமா என கேட்டபோது இதனை நடிகா் விஜயிடம் கேளுங்கள்.
உள்ளாட்சித் தோ்தலுக்கு தேமுதிா தயாராகி வருகிறது. வேட்பாளா்கள் எங்கெல்லாம் போட்டியிடலாம் என்பதை ஆய்விற்கு பிறகு அதிகாரப்பூா்வமாக அறிவிப்போம்.
அதானி துறைமுக விரிவாக்கத்தால் பழவேற்காடு மீனவா்கள் பல்வேறு பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா் என்றாா் பிரேமலதா.
இந்த நிகழ்வில் தேமுதிக நிா்வாகிகள் எல்.கே.சுதீஷ் , டில்லி, எஸ்.பி.டி.ராஜேந்திரன், தனஞ்செயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்

