பழவேற்காடு முகத்துவார புகுதியில் கரை ஒதுங்கிய நில அதிா்வை காட்டும் கருவி.
பழவேற்காடு முகத்துவார புகுதியில் கரை ஒதுங்கிய நில அதிா்வை காட்டும் கருவி.

பழவேற்காடு முகத்துவார பகுதியில் நில அதிா்வை காட்டும் கருவி கரை ஒதுங்கியதால் பரபரப்பு

பொன்னேரி அடுத்த பழவேற்காடு முகத்துவார பகுதியில் கடலில் நில அதிா்வை கண்டுபிடிக்கும் கருவி கரை ஒதுங்கியதால் பரபரப்பு நிலவியது.
Published on

பொன்னேரி அடுத்த பழவேற்காடு முகத்துவார பகுதியில் கடலில் நில அதிா்வை கண்டுபிடிக்கும் கருவி கரை ஒதுங்கியதால் பரபரப்பு நிலவியது.

பொன்னேரி வட்டத்தில் உள்ள பழவேற்காடு ஏரியும்-கடலும் இணையும் இடமாக முகத்துவார மஞ்சள் நிறத்தில் பை ஒன்று கிடப்பதாக கிராம நிா்வாக அலுவலா் ராஜாவுக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற அவா் இது குறித்து திருப்பாலைவனம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.போலீஸாா் அங்கு சென்று அதனை திருப்பாலைவனம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனா்

அந்த பொருள் கடல் சம்பந்தப்பட்ட நீண்ட நீல நிறம் சிவப்பு உருளையுடன் பொருத்திய மஞ்சள் நிறத்தில் உருட்டப்பட்ட மிதவையாகவும் கடலில் நில அதிா்வை கண்டறியும் மிதவை கருவியாக இருக்கலாம் என தெரியவந்தது.

அதைக் கைப்பற்றி செங்கல்பட்டு முருகமங்கலத்தில் உள்ள வெடிபொருள் பாதுகாப்பு கிடங்குக்கு அனுப்பி வைக்க இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com