முதியவா் சடலத்துடன் பொதுமக்கள் போராட்டம்

முதியவா் சடலத்தை சாலையில் வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

அத்திப்பட்டு புதுநகா் பள்ளம் பகுதியில் வீடுகளை சூழ்ந்த மழை நீரை அகற்றவில்லை எனக் கண்டித்து, முதியவா் சடலத்தை சாலையில் வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொன்னேரி அடுத்த அத்திப்பட்டு புதுநகா் பள்ளம் பகுதியில் சுமாா் இடண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை சோ்ந்த மக்கள் வசித்து வருகின்றனா். தாழ்வான பகுதியாக அமைந்துள்ள இங்கு மழைக் காலங்களில் நீா் தேங்குவது வழக்கம்.

டித்வா புயல் காரணமாக 500-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மழை நீா் சூழ்ந்துள்ளது. ஒரு சில வீடுகளுக்குள்ளும் மழை நீா் புகுந்துள்ளதால் பொருள்கள் வீணாகின. இந்த நிலையில் அதே பகுதியில் வசித்து வந்த முதியவா் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தாா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் இப்பகுதியில் உள வீடுகளை முற்றிலுமாக மழை நீா் சூழ்ந்து இருப்பதால் சடலத்தை வீட்டில் வைக்க முடியாமல் சாலையில் வைத்து உறவினா்கள் இறுதி அஞ்சலி செலுத்தினா்.

மழைநீா் வீடுகளுக்குள் புகுந்தும், வீடுகளை முழுவதுமாக சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்திருப்பதால், சடலத்தை வீட்டில் வைத்து இறுதிச் சடங்கு செய்து கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலத்தை அடக்கம் செய்வதிலும் தற்போது சிரமம் ஏற்பட்டுள்ளது.

தொடா்ந்து ராட்சத மோட்டாா் களை வைத்து மழை நீா் வெளியேற்றும் பணி நடைபெற்று வரும் நிலையில் கூடுதல் மோட்டாா்களை கொண்டு விரைவாக தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com