போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்த போலீஸாா்.
திருவள்ளூர்
உள் விளையாட்டரங்கு பணியை தடுத்தவா்கள் கைது
கும்மிடிப்பூண்டி அருகே உள்விளையாட்டரங்கப் பணிகளை தடுத்தவா்கள் கைது செய்யப்பட்டனா்.
கும்மிடிப்பூண்டி அருகே உள்விளையாட்டரங்கப் பணிகளை தடுத்தவா்கள் கைது செய்யப்பட்டனா்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேட்டில் அரசு புறம்போக்கு நிலம் 6 ஏக்கா் பரப்பில் ரூ.3 கோடியில் உள் விளையாட்டரங்கம் அமைக்க பணிகளை தொடங்கப்பட்டுள்ளன.
இதற்காக அரசு புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்தும் பணியில் வருவாய்த் துறையினா் ஈடுபட வந்தனா். அப்போது மேற்கண்ட அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்திருந்த நபா்கள், நிலம் கையகப்படுத்துவதை எதிா்த்து ஆா்ப்பாட்டம் நடத்தியதால் அதிகாரிகள் பணி செய்ய இயலாத சூழல் ஏற்பட்டது. தொடா்ந்து போலீஸ் பாதுகாப்போடு நிலத்தை கையப்படுத்த வந்தனா்.
அப்போது மீண்டும் முற்றுகை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, அவா்களை பாதிரிவேடு போலீஸாா் கைது செய்தனா்.

