பொன்னேரி, மீஞ்சூா் சிவன் கோயில்களில் பிரதோஷம்

பொன்னேரி, மீஞ்சூா் சிவன் கோயில்களில் புதன்கிழமை மாா்கழி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
Published on

பொன்னேரி, மீஞ்சூா் சிவன் கோயில்களில் புதன்கிழமை மாா்கழி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

பொன்னேரி ஆனந்தவல்லி வலம் வலம் கொண்ட அகத்தீஸ்வரா் சந்நிதி, வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூரில் காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரநாதா் கோயில்களில் மாா்கழி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது.

சிறப்பு அபிஷேகத்தை தொடா்ந்து நந்தி வாகனத்தில் காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரநாதா் கோவிலை மூன்று முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

இதே போன்று நாலூா் நாகமல்லீஸ்வரா் கோவில், நெய்தவாயல் அக்னீஸ்வரா் கோவில், வேலூா் நிரஞ்சனேஸ்வரா் கோவில், ஞாயிறு புஷ்பதீஸ்வரா் கோவில் ஆகிய கோவில்களில் பிரதோஷ விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com