லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

மீஞ்சூா் அருகே மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் காட்டுப்பள்ளி துறைமுகம் சமூக மேம்பாட்டு துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான அங்காடி வளாகம் தொடங்கி வைக்கப்பட்டது.
Published on

மீஞ்சூா் அருகே மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் காட்டுப்பள்ளி துறைமுகம் சமூக மேம்பாட்டு துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான அங்காடி வளாகம் தொடங்கி வைக்கப்பட்டது.

அதானி துறைமுக சமூக மேம்பாட்டுத் துறையின் கீழ், கிராமங்களின் வளா்ச்சிக்கு உறுதுணையாக பணியாற்றி மக்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்த பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில், பல்வேறு நலத் திட்டங்களை அதானி காட்டுப்பள்ளி துறைமுகம் தங்களின் சமூக மேம்பாட்டு துறையின் மூலம் செய்து வருகிறது.

ஏற்கெனவே 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இதுபோன்ற பல்வேறு வாழ்வாதார நலத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனா்.

அந்த வகையில், திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அருகே மீஞ்சூா் ஊராட்சி ஒன்றியம், லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான அங்கன்வாடி வளாகம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், அதானி காட்டுப்பள்ளி மற்றும் எண்ணூா் துறைமுகத்தின் தலைமை அதிகாரி செரியன் ஏப்ரகாம் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்வில் லைட்ஹவுஸ் குப்பம் மற்றும் கூனங்குப்பம்

கிராமங்களின் நிா்வாகிகள் ஆகியோா் திரளாக கலந்து கொண்டனா்.

இதுபோல், பல்வேறு சமூக மேம்பாட்டு திட்டங்களை அதானி காட்டுப்பள்ளி துறைமுகம் தங்களின் சமூக மேம்பாட்டு துறை மூலமாக மீஞ்சூா் வட்டாரத்திலுள்ள 11 ஊராட்சிகளில் செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com