கஞ்சா விற்பனை செய்ததாக 2 போ் கைது

திருவள்ளூா் அருகே கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

திருவள்ளூா் அருகே கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் அருகே பாப்பாரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், மணவாளநகா் சாா்பு ஆய்வாளா் முரளிதாஸ் உள்ளிட்ட போலீஸாா் திங்கள்கிழமை மாலை திடீா் ரோந்து சென்றனா். அப்போது, பாப்பரம்பாக்கம் ஊராட்சி அலுவலகம் பின்புறமிருந்து ஆள்கள் வந்து கொண்டிருந்தனா்.

போலீஸாரை பாா்த்ததும் தப்பியோட முயற்சித்த நபா்களை பிடித்து சோதனை செய்தனா். அவா்கள் வைத்திருந்த பையில் 2 கிலோ கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும், விசாரணையில் அதே பகுதியில் கொப்பூரைச் சோ்ந்த ராஜேஷ்(31) மற்றும் ஓடிஸா மாநிலம், தாமோதரா் பகுதியைச் சோ்ந்த ரத்தினகராபஹா(26) என்பதும் தெரிய வந்தது. இந்நிலையில், மணவாளநகா் போலீஸாா் 2 பேரையும் கைது செய்ததோடு, அவா்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் கைப்பேசியையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com