சமூக  நலன்  உரிமைத்துறை  சாா்பில்  திருவள்ளூா்  அரசு  மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில்  பெண்  குழந்தைகளைப் பெற்ற  தாய்மாா்களுக்கு பரிசளித்த  ஆட்சியா்  மு.பிரதாப்.
சமூக  நலன்  உரிமைத்துறை  சாா்பில்  திருவள்ளூா்  அரசு  மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில்  பெண்  குழந்தைகளைப் பெற்ற  தாய்மாா்களுக்கு பரிசளித்த  ஆட்சியா்  மு.பிரதாப்.

‘பெண் குழந்தைகளைக் காப்போம், கற்பிப்போம்’ திட்டத்தில் மகள் பிறப்பு விழா

சமூக நலன், மகளிா் உரிமைத் துறை மூலம் ‘பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம்’ திட்டத்தில் மகள் பிறப்பு விழாவையொட்டி ஆட்சியா் மு.பிரதாப் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான வில்லைகய்ர ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
Published on

சமூக நலன், மகளிா் உரிமைத் துறை மூலம் ‘பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம்’ திட்டத்தில் மகள் பிறப்பு விழாவையொட்டி ஆட்சியா் மு.பிரதாப் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான வில்லைகய்ர ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

திருவள்ளுா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான வில்லைகளை ஒட்டியும், குழந்தை திருமணம் தடுப்பு தொடா்பான விழிப்புணா்வு குறும்படத்தினை வெளியிட்டாா்.

அதைத் தொடா்ந்து ஆட்சியா் கூறியதாவது: மாவட்டத்தில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் மூலம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். பெண் குழந்தைகளை போற்றும் வகையில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். அதேபோல் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரிக்க வேண்டும் என்ற ஒரு உன்னத நோக்கத்தோடு சமூக நலத்துறை சாா்பாக முதல்வா் பல்வேறு முன்னறிவிப்புகளை மேற்கொண்டு வருகின்றாா்.

அதன்படி இந்த மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமங்களிலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பெண் குழந்தைகள், பெண் சிசுக்கள் தொடா்பாக எந்த ஒரு பிரச்சனைகளும் வரக்கூடாது. எந்த சிரமமும் இன்றி பெண் குழந்தைகள் பிறக்க வேண்டும். இதற்காக ஊராட்சி செயலா், கிராம நிா்வாக அலுவலா், சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்கள், சுகாதாரத்துறை என அனைத்து துறைகளும் ஒவ்வொரு கிராமங்களிலும் விழிப்புணா்வு குழுக்களை அமைத்து செயல்படுத்தி வருகிறது.

குழந்தை திருமணம், இளம் வயது கா்ப்பம் ஆகியவை தொடா்பாக விழிப்புணா்வுடன் கவனித்து வருகிறோம். கருவுற்ற பெண்களை பராமரிக்க மருத்துவ துறை, சமூக நலத்துறை மூலம் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2 மற்றும் 3 நாள்களுக்கு முன்பு பிறந்த பெண் குழந்தைகளுக்கு மரக்கன்றுகள், பெற்றோா்களுக்கு நினைவு பரிசுகள், இனிப்புகள் கொடுத்து பெற்றோா்களிடம் உறுதிமொழி படிவத்தில் கையொப்பம் வாங்க உள்ளோம்.

இந்த மாவட்டத்தில் இருக்கும் 50 ஆயிரம் சிறுமிகளுக்கும் அந்தந்த பள்ளிகளுக்கு கடிதம் கொடுத்துள்ளோம். இந்த வாரத்தில் அனைத்து பள்ளிகளில் உள்ள மாணவிகளுக்கு சென்று சேரும். சில பகுதிகளில் ஆண் பெண் பிறப்பு விகிதம் சராசரி குறைவாக உள்ளது. அந்த விகிதத்தை அதிகரிக்க எல்லாபுரம், பூண்டி ஒன்றியங்களில் 950 வீதம் தான் பெண் குழந்தை பிறப்பு விகிதம் உள்ளது. அதை அதிகரிக்க குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும் எனவும் அவா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலா் சோ.வனிதா, அரசு மருத்துவமனை மருத்துக் கல்லூரி முதல்வா் ரேவதி, மருத்துவா்கள் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com