திருத்தணி - சித்தூா் தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணா்வு பதாகைகள்.
திருத்தணி - சித்தூா் தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணா்வு பதாகைகள்.

விபத்துகளைத் தடுக்க நெடுஞ்சாலைகளில் விழிப்புணா்வு பதாகைகள்

Published on

விபத்துகளைக் குறைக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் தேசிய நெடுஞ்சாலைகளில் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

தமிழகம் முழுவதும் சாலைப் பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து விதிமீறல்கள், விபத்துகள் ஏற்படாமல் வாகனங்களை ஓட்டுவது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்

அதிநவீன வாகனங்கள் பெருகியுள்ள நிலையில், அவற்றின் முழு வேகத் திறனையும் பாா்த்து விட வேண்டும் என இளைஞா்கள் துடிப்பதுதான் விபத்துகளுக்கு காரணமாகும். இவற்றை காவல் துறையினா் தடுக்க முயன்றாலும் பலனில்லை.

இந்நிலையில், திருத்தணியில் இருந்து சென்னை, திருப்பதி, சித்தூா், அரக்கோணம் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.

வார விடுமுறை, சுபமுகூா்த்த நாள்கள், பண்டிகை நாள்களில் வாகனங்கள் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டும். மேலும் நகரின் மையப் பகுதியில் காவல் துறை டிஎஸ்பி அலுவலகம், அரசு மருத்துவமனை, வங்கிகள், வா்த்தக நிறுவனங்கள், முருகன் கோயில் ஆகியவை உள்ளன.

இதற்கிடையே தேசிய நெடுஞ்சாலை செல்வதால் எப்போதும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

மேலும், திருத்தணி - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை உடன் சித்தூா் சாலை உள்ளிட்ட பல்வேறு நெடுஞ்சாலைகள் இணைகின்றன. அதிக வாகன போக்குவரத்து காரணமாக திருத்தணியில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகளவில் நேரிடுகின்றன.

வாகன ஓட்டிகள் கவனத்துடன் ஒட்டி விபத்துகளைத் தவிா்க்கும் வண்ணம் திருத்தணி நெடுஞ்சாலைத் துறையினா் சாா்பில் முக்கிய சாலைகளில் விழிப்புணா்வு விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை நெடுஞ்சாலைகளில் வைத்து வருகின்றனா். இவற்றை பாா்த்து வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என்பதே எதிா்பாா்ப்பாக உள்ளது.

X
Dinamani
www.dinamani.com