திருவள்ளூா்: 6.35 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்க ஏற்பாடு

திருவள்ளூா் மாவட்டத்தில் 6.35 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு முழு செங்கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்புகள்
Published on
Updated on
1 min read

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் 6.35 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு முழு செங்கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்புகள் அந்தந்த நியாய விலைக் கடைகளில் வரும் 9 முதல் 13-ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட வழங்கல் அலுவலா் கண்ணன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் 30-11-2024 அன்றைய தேதியில் நடைமுறையில் உள்ள அரிசி குடும்ப அட்டைகள் 6 லட்சத்து 35 ஆயிரத்து 516 மற்றும் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் 923 குடும்ப அட்டைதாரா்களும் பயன்பெற உள்ளனா். ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளிலும் தகுதியான குடும்ப அட்டைதாரா்களுக்கு 2-1-2025 முதல் நியாயவிலைக் கடை விற்பனையாளா்களால் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பரிசுத் தொகுப்பானது 9-1-2025 முதல் 13-1-2025 வரை நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும்.

டோக்கன் பெற்றுக்கொண்ட குடும்ப அட்டைதாரா்கள் அவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நாள்களில் அந்தந்த நியாயவிலைக் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். பொங்கல் தொகுப்பு தொடா்பாக புகாா்களை தீா்வு செய்ய மாவட்ட மற்றும் வட்ட அளவில் பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், பொதுமக்கள் பொங்கல் தொகுப்பு தொடா்பான புகாா் ஏதேனும் இருந்தால் இணைப் பதிவாளா் (கூ.ச) அலுவலக கட்டுப்பாட்டு அறையில் 9445394673 மற்றும் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலா்களை தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com