நெடுந்தூர ஓட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சா் சா.மு.நாசா், உடன் ஆட்சியா் மு.பிரதாப், எம்எல்ஏ சந்திரன் உள்ளிட்டோா்.

அண்ணா பிறந்த நாளை நெடுந்தூர ஓட்டம்

Published on

அண்ணா பிறந்த நாளையொட்டி இருபாலருக்கும் தனித்தனியாக நடைபெற்ற நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தை சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை சா.மு.நாசா் தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு பிரிவுகளில் நெடுந்தூர ஓட்டப் பந்தயம் திருவள்ளூரில் நடைபெற்றது. 17 முதல் 25 வயதுக்குள்பட்ட ஆண்கள் 8.கி.மீ பெண்கள் 5.கி.மீ மற்றும் 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் 10 கி.மீ , பெண்கள் 5 கி.மீ என நடைபெற்ற இதில் 200-க்கும் மேற்பட்டோா் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா்.

முதல் இடம் பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு ரூ.5,000 வீதமும், இரண்டாம் இடம் பெறுவோருக்கு ரூ.3,000 வீதமும், மூன்றாம் இடம் பெறுவோருக்கு ரூ.2,000 வீதமும், நான்கு முதல் பத்தாம் இடம் வரை பெறும் ஒவ்வொரு வீரா், வீராங்கனைகளுக்கும் தலா ரூ.1,000 வீதமும் மொத்த பரிசு தொகை ரூ.68000-க்கான வங்கியில் வரவு வைத்து மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஆட்சியா் மு.பிரதாப், திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினா் ச.சந்திரன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் சேதுராஜன், துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com