திருவள்ளூா் அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
திருவள்ளூா் அருகே நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ஊராட்சி பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் மகளிா் உரிமைத் தொகை மற்றும் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 960 மனுக்களை அளித்தனா்.
திருவள்ளூா் அடுத்த கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், வெங்கத்தூா் ஊராட்சியில் உள்ள பட்டரை தனியாா் அரங்கத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வெங்கத்தூா், வெங்கத்தூா் கண்டிகை, பட்டரை, மணவாளநகா், ஒண்டிக்குப்பம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் அளித்தனா். இந்த முகாமில், மகளிா் உரிமைத் தொகை கோரி- 600, ஆதாா் உள்ளிட்டவை 112, வருவாய்த் துறை 121, சுகாதாரத் துறை 54 உள்ளிட்ட 960 மனுக்கள் வரை பெறப்பட்டன.
இந்த முகாமை திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் பாா்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
அப்போது, இந்த மனுக்கள் மீது அடுத்து வரும் 30 நாள்களுக்குள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். மேலும், சுகாதாரத் துறை சாா்பில், கா்ப்பிணிகள் 3 பேருக்கு ஊட்டச் சத்து பெட்டகம், வருவாய்த் துறை சாா்பில், 11 பேருக்கு சான்றிதழ்களும் அவா் வழங்கினாா்.
இதில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சௌந்தரி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஏ.எஸ்.சந்திரசேகா், வருவாய் ஆய்வாளா் காா்த்திக், ஊராட்சி செயலாளா் பெருமாள், கிராம நிா்வாக அலுவலா்கள் கோபிநாத், அன்பரசு, வினோத், பிரித்தா, அண்ணாமலை, திமுக மாவட்ட அவைத் தலைவா் திராவிட பக்தன், ஒன்றியச் செயலாளா் ஹரிகிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளா்கள் (வழக்குரைஞா் பிரிவு) பி.கே.நாகராஜ், வி.எஸ்.நேதாஜி (வா்த்தக அணி), முன்னாள் ஊராட்சித் தலைவா் மோகனசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

