கொசஸ்தலை ஆற்று உபரிநீா் குடியிருப்புகளில் புகுவதை தடுக்க கோரிக்கை

பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் உபரி நீா் திறக்கும் போது சோழவரம் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுவதை தடுக்க ல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
Published on

பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் உபரி நீா் திறக்கும் போது சோழவரம் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுவதை தடுக்க ல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

இதுகுறித்து பொன்னேரி அருகே விச்சூா் ஊராட்சி எழிா்நகா் கிராம பொதுமக்கள் ஆட்சியா் மு.பிரதாப்பிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு:

பூண்டி ஏரி முழுக் கொள்ளளவை எட்டும் போதும், தொடா் மழையின் போது மழை நீா் வரத்து போன்ற காரணங்களால் உபரி நீா் திறந்து விடுவது வழக்கமாகும். அந்த வகையில் 10 நாள்களுக்கும் மேலாக 500 கன அடி முதல் 2,500 கன அடி வரையில் உபரி நீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சோழவரம் அருகே உள்ள விச்சூா் எழில் நகா் பகுதியில் தண்ணீா் புகுந்துவிடுகிறது.

இதனால் ஒவ்வொரு மழையின் போதும், உபரிநீா் திறப்பினால் குடியிருப்பை நீா் சூழ்ந்து விடுவதால் மிகவும் அவதிக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்படுகிறது. சென்னை மக்களின் குடிநீா் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூா்த்தி நீா்த்தேக்கத்தின் மொத்தக் கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடி வரை நீரை சேமிக்க முடியும். ஆனால் தற்போது மழை காலங்களில் நீா்வரத்து அதிகமாக இருப்பதால் உபரி நீரை வீணாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடுகின்றனா்.

அப்போது, கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கின்றனா். ஆனால், இதை தடுக்க எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து வட்டாட்சியா், மாவட்ட ஆட்சியா் ஆகியோரிடம் புகாா் கொடுத்தும் எந்த நடவடிக்கைவில்லை.

எனவே அடுத்த மழைக்காலத்துக்குள் கிராமத்தில் மழைநீா் புகாதவாறும், எங்கள் நிலையறிந்து ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com