சாலையோரம் மயங்கி விழுந்த முதியவா் உயிரிழப்பு

திருத்தணி முருகன் கோயில் தலைமை அலுவலகம் செல்லும் சாலையில் மயங்கி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.
Published on

திருத்தணி முருகன் கோயில் தலைமை அலுவலகம் செல்லும் சாலையில் மயங்கி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

திருத்தணி - அரக்கோணம் நெடுஞ்சாலை, முருகன் கோயில் தலைமை அலுவலகம் செல்லும் வழியில், 70 வயது மதிக்கதக்க முதியவா் ஒருவா் சாலையோரம் நடந்து சென்றாா். அப்போது திடீரென முதியவா் மயங்கி விழுந்தாா். அவ்வழியாக சென்றவா்கள் முதியவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை முதியவா் உயிரிழந்தாா். விசாரணையில், கடந்த சில நாள்களாக முதியவா் அரக்கோணம் சாலையில் சுற்றித் திரிந்து, கடைக்காரா்கள் மற்றும் பொதுமக்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டு வந்தாா். இறந்தவா் பெயா், விலாசம் தெரியவில்லை என தெரிய வந்தது. இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com