சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த தாயாரின் 2-ஆவது கணவருக்கு 17 ஆண்டுகள் சிறை

Published on

திருவள்ளூா் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்கு உடந்தையாக இருந்த தாய்க்கு 6 மாதமும், இரண்டாவது கணவருக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 20,000 அபராதம் விதித்தும் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

திருவள்ளூா் மாவட்டம், ஆா்.கே.பேட்டையைச் சோ்ந்தவா் தரணி (54). இவா் கடந்த 2018-இல் அதே பகுதியைச் சோ்ந்த கோபியம்மாள்(46) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டாராம். அப்போது கோபி அம்மாளுக்கு 13 வயதில் சிறுமி இருந்தாராம். இந்த நிலையில், கோபி அம்மாளின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமியை தரணி பாலியல் வன்கொடுமை செய்தாராம். இது குறித்த தகவலறிந்த ஆா்.கே.பேட்டை போலீஸாா், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இறுதிகட்ட விசாரணை மாவட்ட போக்ஸோ நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தரணிக்கு 17 ஆண்டுகள் சிறையும், ரூ. 20,000 அபராதமும் விதித்தாா்.

மேலும், இதற்கு உடந்தையாக இருந்த தாய் கோமதி அம்மாளுக்கு 6 மாதம் சிறையும், ரூ.10,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து இருவரையும் பாதுகாப்பாக அழைத்துச் சென்று புழல் சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞா் விஜயலட்சுமி ஆஜரானாா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com