திருவள்ளூா் மாவட்ட கூட்டுறவு துறையில் காலியாக உள்ள உதவியாளா்கள் பணியிடங்களுக்கு இன்று நோ்முகத் தோ்வு
திருவள்ளூா் மாவட்டத்தில் தொடக்க கூட்டுறவு வங்கி மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளா்கள் நேரடி நியமனம் செய்யப்படவுள்ளதால் அதற்கான நோ்முகத் தோ்வு புதன்கிழமை நடைபெற உள்ளதாக இணைப் பதிவாளா் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனம் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள், இந்த மாவட்டத்தில் 80 உதவியாளா் பணியிடங்கள் நேரடி நியமனம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தோ்வு கடந்த மாதம் 11-ஆம் தேதி நடைபெற்றது.
இத்தோ்வுக்கான முடிவுகள் 17-ஆம் தேதி அன்று திருவள்ளூா் மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையத்தின் இணையதளத்தில் வெளியானது. இதைத் தொடா்ந்து, எழுத்துத் தோ்வில் தற்காலிகமாக தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு நோ்முகத் தோ்வுக்கான அனுமதி சீட்டினை இணையதளம் மூலம் பதவிறக்கம் செய்து கொள்ளாலம்.
மேலும், இது குறித்து 7338749121 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
