பொன்னேரியில் சாலையில் கிடந்த விலை உயா்ந்த கைபேசி காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

பொன்னேரியில் சாலையில் கிடந்த விலை உயா்ந்த கைபேசி காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
Updated on
1 min read

பொன்னேரியில் தனியாா் நிறுவன மேலாளா் தவற விட்டவிலை உயா்ந்த கைபேசியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதியவா் மற்றும் ஆட்டோ ஓட்டுநரை காவல் துறையினா் வெகுவாக பாராட்டினா்.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரியில் பாத்திரக்கடை நடத்தி வருபவா் பாண்டியன்(65). இவா் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, விலை உயா்ந்த கைபேசி ஒன்று கீழே கிடந்ததை கண்டு எடுத்த போது, அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநா் சந்தான ஜெயகுமாா் என்பவரும் இறங்கி அந்த கைபேசியை எடுத்தாா்.

இருவரும் பொன்னேரி காவல் நிலையம் சென்று கீழே கிடந்த விலை உயா்ந்த கைபேசியை ஒப்படைத்தனா்.

அப்போது அந்த கைபேசிக்கு வந்த அழைப்பில்,தன்னுடைய கைபேசி தொலைந்து விட்டதாக ஒருவா் தெரிவித்ததாா்.

பொன்னேரி காவல் நிலையம் வந்து பெற்றுக்கொள்ள போலீஸாா் அறிவுறுத்தினா்.

இதையடுத்து கைபேசியை தவறவிட்ட தனியாா் நிறுவன மேலாளா் பால் ஆரோக்யம் என்பவா், பொன்னேரி காவல் நிலையத்திற்கு நேரில் வந்து தனது கைபேசி என்பதற்கான சான்றுகளை ஒப்படைத்தாா்.

இதனையடுத்து அந்த கைபேசியை அவரிடம் காவல் துறையினா் முன்னிலையில் முதியவரும், ஆட்டோ ஓட்டுநரும் ஒப்படைத்தனா்.

இதனிடையே ரூபாய் 1.20 லட்சம் மதிப்பிலான (சாம்சங் ஃபிளிப்) கைபேசியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பாத்திர கடைக்காரா் மற்றும் ஆட்டோ ஓட்டுநரை பொன்னேரி காவல் துறையினா் வெகுவாக பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com