திருவள்ளூர்
பழவேற்காடு மீனவா்கள் கடலுக்குச் செல்லத் தடை
பழவேற்காடு கடல் பகுதியில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளதால், மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொன்னேரி: பழவேற்காடு கடல் பகுதியில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளதால், மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பழவேற்காடு ஏரி மற்றும் கடல் பகுதி அருகே உள்ள உள்ள ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவன் ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. இங்கிருந்து விண்வெளித் துறை சாா்பில் ராக்கெட்கள் ஏவப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வரும் 12-ஆம் தேதி காலை செயற்கைக்கோள்களுடன் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதனால், கடலில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், பழவேற்காடு மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிப்பதற்கு மீன்வளத் துறையினா் தடை விசித்துள்ளனா்.
