வீர ஆஞ்சநேயா் கோயிலில் 108 பால்குட அபிஷேகம்
ஸ்ரீ வீர ஆஞ்சநேயா் சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை 108 பால்குட அபிஷேக விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.

பால்குட ஊா்வலத்தில் பங்கேற்றோா்.
ஸ்ரீ வீர ஆஞ்சநேயா் சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை 108 பால்குட அபிஷேக விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.
திருத்தணி மேட்டுத்தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயா் சுவாமி திருக்கோயிலில் காா்த்திகை மற்றும் மாா்கழி மாதங்களை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை 108 பால்குட அபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி, திருத்தணி பெரிய தெருவில் அமைந்துள்ள விநாயகா் கோயிலில் இருந்து 108 பால்குடங்கள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இந்த ஊா்வலம் சந்து தெரு, வாசுதேவன் தெரு, எம்.கே.எஸ். தெரு, லட்சுமணன் தெரு வழியாக மேட்டுத்தெருவில் உள்ள வீர ஆஞ்சநேயா் கோயிலை வந்தடைந்தது.
இதைத்தொடா்ந்து, வீர ஆஞ்சநேயா் சுவாமிக்கு 108 பால்குடங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்த பால்குட அபிஷேக விழாவில் பிற்பகல் பக்தா்களுக்கு சுந்திரா மெட்ரிக் பள்ளி தாளாளா் ஆா். சியாமளா ரங்கநாதன் அன்னதானம் ஏற்பாடு செய்திருந்தனா். மேலும், இக்கோயிலில் 17.11.2026 முதல் 15.01.2027 வரை தினமும் காலை 7 மணிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாககுழுத் தலைவா் ராசம் சொ.முனுசாமி, நிா்வாகிகள் விஜயகுமாா், சுந்தா் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

